

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே, பதிவான 40 வாக்குகள் மாயமாகி உள்ளதாக, சர்ச்சை எழுந்துள்ளது. இனாம்சமயபுரம் ஊராட்சியில் உள்ள 9 வது வார்டு உறுப்பினர் தேர்தலில் இந்த முறைகேடு நிகழ்ந்திருப்பதாக, பாதிக்கப்பட்ட 2 வேட்பாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர். மூன்று பேர் போட்டியிட்ட நிலையில், வாக்குச்சீட்டில் 4 வேட்பாளர்களின் சின்னம் இடம்பெற்றிருந்ததாகவும், அவர்கள் முறையிட்டுள்ளனர்.