தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக, உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. சென்னை மற்றும் 9 புதிய மாவட்டங்கள் நீங்கலாக 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து, 27 மாவட்டங்களில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம், மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு, தேர்தலை முறையாக நடத்துவது தொடர்பாக பழனிச்சாமி ஆலோசனை வழங்கினார்.