காடையாம்பட்டி ஒன்றிய குழு சேர்மன் பதவி : திமுக துணையுடன் கைப்பற்றும் சுயேட்சைகள்?

ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவால், ஓமலூர் தாலுகாவிற்கு உட்பட்ட 3 ஒன்றியங்களையும் அதிமுக இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
காடையாம்பட்டி ஒன்றிய குழு சேர்மன் பதவி : திமுக துணையுடன் கைப்பற்றும் சுயேட்சைகள்?
Published on
ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவால், ஓமலூர் தாலுகாவிற்கு உட்பட்ட 3 ஒன்றியங்களையும் அதிமுக இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. காடையாம்பட்டி ஒன்றிய உறுப்பினர் தேர்தலில், அதிமுகவில் சீட் கிடைக்காததால் சுயேட்சையாக போட்டியிட்ட 7 பேர் வெற்றிபெற்றுள்ளனர். மொத்தம் 19 உறுப்பினர்களை கொண்ட காடையாம்பட்டி ஒன்றியத்தில், திமுகவுடன் துணையுடன், ஒன்றிய குழு சேர்மன் பதவியை பிடிக்க சுயேட்சை வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோன்று, அதிமுக வசமிருந்த ஓமலூர் ஒன்றியத்தை திமுகவும், தாரமங்கலம் ஒன்றியத்தை பாமகவும் கைப்பற்றும் முயற்சியில் தீவிரம் காட்டிவருகின்றன.
X

Thanthi TV
www.thanthitv.com