ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் : தாய்க்கு ஆதரவாக வாக்கு சேகரித்ததால் நடவடிக்கை

ஊரக உள்ளாட்சி தேர்தலில், அதிமுக சார்பாக போட்டியிடும் அவரது தாய்க்கு ஆதரவாக சந்தவாசலை அடுத்த கிருஷ்ணவம் கிராமத்தில் பிரசாரம் செய்துள்ளார்.
ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் : தாய்க்கு ஆதரவாக வாக்கு சேகரித்ததால் நடவடிக்கை
Published on

திருவண்ணாமலை மாவட்டம் போளுர் ஒன்றியம், திண்டிவனம் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருபவர் ஆனந்தன். இவர் ஊரக உள்ளாட்சி தேர்தலில், அதிமுக சார்பாக போட்டியிடும் அவரது தாய்க்கு ஆதரவாக சந்தவாசலை அடுத்த கிருஷ்ணவம் கிராமத்தில் பிரசாரம் செய்துள்ளார். இது குறித்து கிடைத்த புகாரின் அடிப்படையில் ஆனந்தனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com