உள்ளாட்சி தேர்தல் : அரசியல் கட்சிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு

உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் நாளை காலை நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களுடன், மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் நாளை, சென்னையில் இதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு தேர்தல் ஆணைய அலுவலகத்தில் காலை 11.30 மணிக்கு இந்த கூட்டம் தொடங்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com