கடன் பிரச்சனை-தீக்குளித்து தற்கொலை முயற்சி-போலீஸ் மீது குற்றச்சாட்டு

விழுப்புரம் மாவட்டம் பெண்ணைவலம் கிராமத்தில் தனியார் நிறுவனத்தில் பெற்ற கடனை செலுத்த முடியாத நிலையில், போலீசார் மிரட்டியதாக கூறி, இளைஞர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனியார் நிறுவனஅலுவலர், காவல்துறை உதவியுடன், அப்பாஸ் என்பவரிடம் கடனை பெற வந்துள்ளார். அப்போது காவலர் ஒருவர், அப்பாஸ் மீது கொலை வழக்கு போட்டு விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அப்பாஸ் தீக்குளித்த நிலையில், அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசாரை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டதால், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com