"நீங்க தண்ணி, தம் அடிக்குறதுக்கு நாங்க சம்பாரிச்சு குடுக்கணுமா''

x

கடன் தவணை - நிதி நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

திருவாரூர் அருகே விளமல் பகுதியில், நுண் கடன் நிதி நிறுவன கிளை அலுவலகத்தை பாதிக்கப்பட்ட பெண்கள் முற்றுகையிட்டனர். ராமானுஜ மணலி பகுதியைச் சேர்ந்த 15 பெண்கள், இந்த நிதி நிறுவனத்தில் கடன் பெற்று தவணை முறையில் கடன் தொகையை செலுத்தி வந்துள்ளனர். கடந்த 9 மாதங்களாக தவணைத்தொகையை செலுத்திய நிலையில் முறையாக வரவு வைக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக துணை மேலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்கள், நிறுவனம் தரப்பில் முறையாக பதில் சொல்லவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

இதனிடையே, பணத்தை தாங்கள் கையாடல் செய்யவில்லை என்றும், கலெக்‌ஷன் ஏஜெண்ட் தான் கையாடல் செய்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நிதி நிறுவன மேலாளர் தொலைபேசி மூலம் பெண்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்