``சாம்பாரில் கிடந்த பல்லி'' | மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்

x

சாம்பாரில் பல்லி - சாப்பிட்ட 4 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்

தாராபுரம் நடுநிலைப்பள்ளியில், பல்லி விழுந்த காலை உணவை சாப்பிட்ட 4 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. கொழிஞ்சி வாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 400 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் 100 மாணவர்கள் காலை உணவை பள்ளியில் சாப்பிடுவது வழக்கம். இவர்களுக்கு ஒப்பந்ததாரர் மூலம் தயாரிக்கப்படும் உணவு விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், காலை வழங்கப்பட்ட சாம்பாரில், இறந்து போன பல்லி கிடந்துள்ளது. இதனை தொடர்ந்து உணவு அருந்திய 4 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பள்ளியிலேயே மயங்கி விழுந்தனர். உடனடியாக ஆசிரியர்கள், 4 பேரையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்