பிரபல குடிநீர் பாட்டிலில் பல்லி..? சென்னை அருகே பரபரப்பு
பொன்னேரியில் உள்ள தனியார் குடிநீர் ஆலையில் வாங்கிய குடிநீர் பாட்டிலில் பல்லி இருந்ததால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை புழல் அடுத்த கதிர்வேடு பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவர் சிங்கிலிமேடு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகாக பொன்னேரியில் உள்ள தனியார் குடிநீர் ஆலையில் 140 குடிநீர் பாட்டில்களை வாங்கியுள்ளார். அதில் ஒரு பாட்டிலில், இறந்த நிலையில் பல்லி மிதந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து குடிநீர் ஆலை நிர்வாகத்திடம் முறையிட்டபோது முறையாக பதில் அளிக்க வில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து பாபு காவல்துறை மற்றும் உணவுப்பாதுகாப்பு துறையில் புகார் அளித்துள்ளார்.
Next Story
