Ramanathapuram Fire accident | தீக்கிரையான வாழ்வாதாரம் - அரசு உதவிட கோரிக்கை

x

ராமநாதபுரம் அடுத்த சக்கரக்கோட்டையில் தீ விபத்தால் வாழ்வாதாரத்தை இழந்த உமர் அலி என்பவர் அரசு உதவ வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான டெக்கரேஷன் பொருட்கள் தீக்கிரையானது.

மாநாடு, பொதுக்கூட்டம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு பந்தல் அமைக்கும் டெக்கரேஷன் பொருட்களை 20 ஆண்டகளாக சிறுக சிறுக சேர்த்து வைத்த நிலையில் தீ விபத்தில் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதனால், செய்வதறியாது தவிக்கும் டெக்கரேஷன் குடோன் உரிமையாளர் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்மென கோரிக்கை வைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்