எலி மருந்து சாப்பிட்டு காவல் நிலையத்திலேயே பெண் தற்கொலை முயற்சி

எலி மருந்து சாப்பிட்டு காவல் நிலையத்திலேயே பெண் தற்கொலை முயற்சி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மூவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில், விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட பெண் ஒருவர், அங்கேயே எலி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெ.புதுக்கோட்டை கிராமத்தில் நேற்று இரவு மர்ம கும்பல் புகுந்து ராஜேந்திரன், சின்னச்சாமி உள்ளிட்ட மூவரை அரிவாளால் வெட்டியதுடன், கார் மற்றும் சிசிடிவி கேமராக்களையும் சேதப்படுத்தி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் நபரின் உறவினரான பெண்ணை விசாரணைக்காக மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

அப்போது, காவல் நிலைய கழிவறைக்கு சென்ற பெண் எலி மருந்தை உட்கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பெண்ணை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com