ரகசிய காதல் அம்பலமானதால் விபரீதம் - இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
ஜவ்வாது மலை அருகே, ரகசிய காதல் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரியவந்ததால், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் அன்பரசனுக்கும், அவரது முதலாளியின் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் அன்பரசனின் முதலாளிக்கு தெரியவந்ததை தொடர்ந்து இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக தெரிகிறது.
இதையடுத்து இருவரும் ஜவ்வாது மலை குட்டக்கரை காட்டுப்பகுதிக்கு சென்ற நிலையில் மரத்தில் 2 தூக்கு கயிறுகளை கட்டி அன்பரசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆனால், அவரது தோழியால் மரத்தில் ஏற முயன்றபோது தவறி விழுந்ததால் உயிர் தப்பி உள்ளார்.
தகவலறிந்து சென்ற போலீசார் அன்பரசனின் உடலை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
