லயன்ஸ் கிளப் ஆப் ஸ்ரீ கே.எம்.டி., திருத்தணிகை குழுமம் - ஏழை மக்களுக்கு புத்தாடைகள், பணம் வழங்கி உதவி

லயன்ஸ் கிளப் ஆப் ஸ்ரீ கே.எம்.டி., திருத்தணிகை குழுமம் - ஏழை மக்களுக்கு புத்தாடைகள், பணம் வழங்கி உதவி

Lions Club of India | லயன்ஸ் கிளப் ஆப் ஸ்ரீ கே.எம்.டி., திருத்தணிகை குழுமம் - ஏழை மக்களுக்கு புத்தாடைகள், பணமுடிப்பு வழங்கி உதவி

#diwali | #lionsclub #thanthitv

ஏழை மக்களுக்கு புத்தாடைகள், பணமுடிப்பு வழங்கி உதவி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, லயன்ஸ் கிளப் ஆஃப் ஸ்ரீ கே.எம்.டி. குழுமம் மற்றும் திருத்தணிகை குழும நிறுவனங்கள் இணைந்து, ஏழை, எளிய மக்களுக்கு புத்தாடைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி தீபாவளி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டன. இதன்படி, ஏழைப் பெண்களுக்கு புடவைகளும், தெருவோரங்களில் வசிக்கும் ஆதரவற்ற ஆண்களுக்கு புத்தாடைகள் மற்றும் பணமுடிப்பும் வழங்கப்பட்டன. இந்த நலத்திட்ட உதவிகளை திருத்தணிகை ரியல் எஸ்டேட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் லயன் கே.கே.முனியாண்டி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் லயன்ஸ் கிளப் கவர்னர் நரசிம்மன், நிர்வாகிகள் பி.ஜெயக்கொடி, எஸ்.பாலசுப்பிரமணியன், ஜி.கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றனர். மேலும், திருத்தணிகை இன்ப்ரா சிட்டி இயக்குநர் எஸ்.அருண்குமார், திருத்தணிகை ரியாலிட்டி வெஞ்சர்ஸ் இயக்குநர் கே.எம்.ஹரிஹரன், திருத்தணிகை ரியல் எஸ்டேட்ஸ் இயக்குநர் டாக்டர் கே.எம்.ஸ்ரீனிவாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர். லயன்ஸ் கிளப் நிர்வாகிகளான ஏ.குருநாதன், எல்.குழந்தை சேசு, எம்.சிவனேசன் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். புத்தாடைகள் மற்றும் பணமுடிப்பைப் பெற்றுக்கொண்ட பயனாளிகள் மகிழ்ச்சியடைந்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்த நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

X