Chennai | Metro | Mall | ஜப்பான், சீனாவை போல் சென்னையில்...பிரமாண்ட மால்... உள்ளே வரும் மெட்ரோ

x

சென்னையில மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வர 29 ம் தேதியோட 10 ஆண்டுகள் நிறைவு பெறுது. இந்த 10 ஆண்டுகள்ள ஏறத்தாழ 39 கோடி பேரு கிட்ட மெட்ரோ ரயில்ல பயணிச்சிருப்பதா சொல்ராங்க மெட்ரோ ரயில் நிறுவனம். போக்குவரத்து நெரிசலுக்கு பேர் போன சென்னையில குறைஞ்ச நேரத்துல பயணிக்கரதுக்காகவே போன 2015 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி மெட்ரோ ரயில் சேவை தொடங்கிச்சு. ஏற்கனவே 55 கிமீ தொலைவுக்கு 2 வழித்தடங்கள்ள மெட்ரோ ரயில் சேவை இயங்கிட்டு வர்ர நிலையில, 118 கிமீ தொலைவுக்கு மேலும் 3 வழித்தடங்கள்ள மெட்ரோ ரயிலோட இரண்டாம் கட்ட பணிகள் நடந்துட்டு வருது. வெகு விரைவுல ஒரு மாசத்துக்கு 1 கோடி பேரு மெட்ரோ ரயில்ல பயணிக்கரவங்களோட எண்ணிக்கை இருக்கும்னும் கணிக்கப்படுது. இப்படி பொதுமக்கள் மத்தியில பெரும் வரவேற்ப மெட்ரோ ரயில் சேவை பெரும் நிலையில தான் ஒரு நாளைக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து போகக்கூடிய சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்துல 5000 சதுர அடியில பிரம்மாண்ட புத்தக பூங்கா அமைக்கப்பட்டிருக்கு. முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்னிக்கு புத்தக பூங்காவ திறந்துவெச்சு பார்வையிட்டாரு. பொதுமக்கள ஈர்க்ககூடிய வகையில சிற்றுண்டியகம், வைஃபை வசதின்னு இன்னும் நிறைய வசதிகளும் செய்யப்பட்டிருக்கு.


இப்படி இன்னிக்கு இருக்கர சூழலுக்கு ஏத்த மாதிரி மெட்ரோ ரயில் சேவை அடுத்தடுத்த கட்டங்கள எட்டிட்டு வருதுன்னு தான் சொல்லனும். அந்த வகையில ஒரு வணிக வளாகத்துக்குள்ளயே வந்து செல்லக்கூடிய மெட்ரோ ரயில் சேவை இருந்தா எப்படி இருக்கும். கற்பனை பண்ணி பார்க்கவே நல்லா இருக்குல, இப்ப ரயில புடிச்சு ஒரு ஸ்டாப்ல இறங்கி அங்கேருந்து கடைத்தெருவுக்கு போயி தேவையான பொருட்கள் வாங்கி திரும்பவும் ரயில் நிலையத்துக்கு வந்து ரயில புடிச்சு வீடு போயி சேர்ரது சிலருக்கு ரொம்ப சிரமமான காரியமா இருக்கு. ஆனா இனிமே மெட்ரோ ரயில புடிச்சு வணிக வளகத்துல இறங்கிட்டு அங்க தேவையான பொருட்கள எல்லாத்தயும் வாங்கிட்டு திரும்ப அதே வணிக வளாகத்துக்குள்ள வர்ர ரயில்ல ஏறி பயணிக்கர வகையில மெட்ரோ ரயில் வழித்தடம் உருவக்கப்பட இருக்கு. ஏற்கனவே ஜப்பான்,சீனா போன்ற நாடுகள்ள இந்த மாதிரியான வழித்தடங்கள் இயங்கிட்டுருக்கு. நீங்க திறையில பார்க்கறீங்கல்லயா அந்த மாதிரியான வடிவமைப்புல தான் அமைய இருக்கு


Next Story

மேலும் செய்திகள்