மிரள வைக்கும் மின்னல் வேகம் - Gravity-ஐ ஓரம் தள்ளி தலைகீழாக ஓடும் கார்..
McMurtry Spéirling Car | மிரள வைக்கும் மின்னல் வேகம் - Gravity-ஐ ஓரம் தள்ளி தலைகீழாக ஓடும் கார்.. விலையை கேட்டால் தலை சுற்றிவிடும்..!
இங்கிலாந்தில் நடைபெற்ற, குட்வுட் பெஸ்டிவல் ஆப் ஸ்பீட் கண்காட்சியில், பிரிட்டீஷ் ஹைப்பர் கார் நிறுவனமான மெக்முர்ட்ரி ஆட்டோமேட்டிவ் நிறுவனம் தலைகீழாக ஓடும் காரை அறிமுகப்படுத்தி பார்வையாளர்களை மிரள செய்துள்ளது. ரோலர் கோஸ்டரை போல புவி ஈர்ப்பு விசைக்கு நேர் எதிராக இந்த காரை நிறுத்துவதில் தொடங்கி, தலைகீழான சாலையில் எந்த வேகத்திலும் பயணிக்காலாம். 23 ஆயிரம் rpm வேகத்தில் சுழலும் இரட்டை விசிறிகள் மூலம் 2,000 கிலோ டவுன்ஃபோர்ஸ் உருவாக்கி 60 மைல் வேகத்தை 1.5 வினாடிகளில் எட்டுகிறது. 2026ம் ஆண்டில் இந்த கார் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மதிப்பில் இதன் விலை வரிகள் நீங்கலாக சுமார் 12.53 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது
