``தூக்குங்க..தூக்குங்க''.. கார் விபத்தில் சிக்கியவர்களை மீட்ட நயினார் நாகேந்திரன்
கோவில்பட்டி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், கார் விபத்தில் காயமடைந்த ஒரு குடும்பத்தினரை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கட்டாரங்குளம் அருகே கார் ஒன்று சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில், 75 வயது முதியவருக்கு பலத்த காயமும், அவரது குடும்பத்தினருக்கு லேசான காயமும் ஏற்பட்டது. அந்த வழியாக காரில் வந்த நயினார் நாகேந்திரன், தனது வாகனத்தை நிறுத்தி, காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளித்தார். பின்னர், 108 ஆம்புலன்ஸ் வாகனம் வர தாமதமானதால், ஆட்டோ வரவழைத்து அவர்களை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
Next Story
