பள்ளிக்கு செல்ல மறுத்த மகளை எரித்து கொன்ற வழக்கு : தாய்க்கு ஆயுள் தண்டனை விதிப்பு

மகளை எரித்து கொன்ற வழக்கில் தாய்க்கு ஆயுள் தண்டனை வழங்கி தூத்துக்குடி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பள்ளிக்கு செல்ல மறுத்த மகளை எரித்து கொன்ற வழக்கு : தாய்க்கு ஆயுள் தண்டனை விதிப்பு
Published on

மகளை எரித்து கொன்ற வழக்கில் தாய்க்கு ஆயுள் தண்டனை வழங்கி தூத்துக்குடி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 2012 ஆம் ஆண்டு கோவில்பட்டியில் பள்ளிக்கு செல்ல மறுத்த மகள் மாரிசெல்வியை தாய் ராஜேஸ்வரி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. மாரிச்செல்வி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் போலீசார் ராஜேஸ்வரியை கைது செய்தனர் . இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமார் சரவணன் குற்றம் சாட்டப்பட்ட ராஜேஸ்வரிக்கு ஆயுள் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com