மதுரை அவனியாபுரத்தில் திமுக பிரமுகர் மகன் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனையை விதித்து உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மகனை கொலை செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க கோரி, மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்த முருகன், தாக்கல் செய்த வழக்கின் மேல்முறையீட்டு மனு, உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ராஜா, புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.