உயிருக்கு ஆபத்து -அம்பேத்கர் சிலை முன்.. பயத்தில் காதல் ஜோடி எடுத்த முடிவு

x

உயிருக்கு ஆபத்து - பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி வேண்டுகோள்

புதுக்கோட்டையில், பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி, அம்பேத்கார் சிலை முன்பாக மாலை மாற்றி, காதல் ஜோடி திருமணம் செய்துகொண்டனர். கந்தர்வகோட்டையைச் சேர்ந்த மகேஸ்வரன் என்பவரும், புதுக்கோட்டையை சேர்ந்த கல்லூரி மாணவியான பிரியாவும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பட்டியலினத்தை சேர்ந்த மகேஸ்வரனை காதலிக்க, பிரியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பிரியா வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில், புதுக்கோட்டை அம்பேத்கார் சிலை முன்பாக விசிகவினர் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

தனது குடும்பத்தினரால் மகேஸ்வரனின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறியுள்ள பிரியா, தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்