உயிரை இழுத்து சென்ற கன்வேயர் பெல்ட் - நினைத்து பார்க்கவே குலைநடுங்கும் சம்பவம்

x

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி ஒப்பந்த ஊழியர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி கொண்டு செல்லக்கூடிய கன்வேயர் பெல்ட் பகுதியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பண்டாரம்பட்டியை சேர்ந்த மனோகரன், எதிர்பாராதவிதமாக கன்வேயர் பெல்ட் பகுதியில் சிக்கி உயிரிழந்தார். சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே உயிரிழந்த ஒப்பந்த ஊழியரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு , சிஐடியு தொழிற்சங்கம் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்