LIC நிறுவனத்திற்கு கிடைத்த உலகளாவிய சிறப்பு..

x

எல்.ஐ.சி நிறுவனத்திற்கு, பிரிட்டிஷ் தரநிலை நிறுவனம் ஐ.எஸ்.ஓ வணிக தொடர்ச்சி மேலாண்மை அமைப்பு சான்றிதழை வழங்கி கௌரவித்துள்ளது. இது, LIC-யின் செயல்பாட்டு மீள்தன்மை, வணிக தொடர்ச்சி திட்டமிடல் மற்றும் இடர் மேலாண்மை திறன்கள் ஆகியவை உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் ஒத்துப்போகின்றன என்பதை அங்கீகரித்து, பிரிட்டிஷ் தரநிலை நிறுவனத்தால் வழங்கப்பட்டு உள்ளது. BCMS எனப்படும் இந்த சான்றிதழ் வலுவான வணிக தொடர்ச்சி நடைமுறைகளைப் பின்பற்றுவதிலும், எதிர்பாராத இடையூறுகளின் போதும் தடையற்ற சேவைகளை உறுதி செய்வதிலும், ஆபத்தை திறம்பட நிர்வகிப்பதிலும் எல்ஐசியின் திறனை அங்கீகரித்து உள்ளது. இதுகுறித்து பேசிய எல்.ஐ.சி.ன் CEO-வும், MD-யுமான சித்தார்த்த மொஹந்தி, எங்கள் பங்குதாரர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், எல்ஐசி மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதில் எங்கள் உறுதிப்பாட்டிற்கு இந்த சான்றிதழை பெறுவது, ஒரு சான்றாகும் எனக் கருத்து தெரிவித்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்