

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தொட்டமுதுகரை கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் சுற்றித்திரிந்த 2 சிறுத்தை குட்டிகளை வனத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தொழிலாளர்கள் கரும்புகளை வெட்டியபோது அங்கு சிறுத்தை குட்டிகள் இருப்பது தெரியவந்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறையினர், சிறுத்தை குட்டிகளை மீட்டனர். வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதி என்பதால் சிறுத்தை, கரும்பு தோட்டத்தில் முகாமிட்டு, குட்டிகளை ஈன்றிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.