நாயை வேட்டையாட வந்த சிறுத்தை - சிசிடிவி காட்சி
நாயை வேட்டையாட வந்த சிறுத்தை - சிசிடிவி காட்சி
குன்னூர் அருகே நாயை வேட்டையாட வந்த சிறுத்தையின் சத்தம் கேட்டு வெளியே வந்த வீட்டின் உரிமையாளரை கண்டு சிறுத்தை ஓடிய சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பெரிய கரும்பாலம் டபுள் போஸ்ட் பகுதியில் உள்ள வீட்டில், வளர்ப்பு நாயை வேட்டையாட வந்த சிறுத்தை சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் கூச்சலிட்டதால் வளர்ப்பு நாயை விட்டு விட்டு சிறுத்தை தப்பி ஓடியது. பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து வனத்துறையினர், சிறுத்தையை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
