Leopard | இரவு நேரத்தில் காரில் சென்றவர்களுக்கு பேரதிர்ச்சி - வெளியான பகீர் வீடியோ
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்–மைசூர் தேசிய நெடுஞ்சாலையின் திம்பம் மலைப்பாதையில், சாலையோரத்தில் நடமாடிய சிறுத்தையால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தடுப்புச்சுவர் அருகே நின்றிருந்த சிறுத்தை, சாலையோர மரத்தில் தனது முகத்தை உரசியபடி சிறிது நேரம் நின்றது. காரில் சென்ற பயணிகளின் சத்தம் கேட்டதும், வனப்பகுதிக்குள் தாவி ஓடியது. இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் வனவிலங்குகள் தென்பட்டால் அருகில் செல்லவோ, அவற்றை தொந்தரவு செய்யவோ கூடாது என்று பயணிகளுக்கு எச்சரித்துள்ளனர்.
