Chennai | Seizure | திடீர் வலிப்பால் துண்டான கால் - சென்னையில் அதிர்ச்சி
சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிச்சாலையில் குடிநீர் வாரிய குழாய்கள் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு, பொக்லைன் இயந்திரத்தில் சிக்கி அவரது கால் துண்டான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பணியில் சுமார் 5க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ரமேஷ் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ரமேஷ் கீழே விழுந்ததில் பொக்லைன் இயந்திரத்தில் அவரது கால் சிக்கி துண்டானது. இந்த சம்பவம் தொடர்பாக, கவனக்குறைவாக செயல்பட்ட காண்ட்ராக்டர்கள் மற்றும் சூப்பர்வைசர் ஆகிய மூவர் மீது வழக்குபதிவு செய்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
