தலைமை எடுத்த முடிவு.. திமுகவில் அதிரடி மாற்றங்களை எதிர்பார்க்கலாம்
2026 சட்டமன்றத் தேர்தல் பணியை தீவிரப்படுத்தும் திமுக
சட்டமன்ற தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் விதமாக, வரும் ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு முன்பு கட்சியில் கட்டமைப்பு ரீதியாக பல மாற்றங்களை செய்ய தி.மு.க முடிவு செய்துள்ளது. திமுகவில் நிர்வாக ரீதியாக ஒன்றியங்களை பிரிக்க வேண்டும் என ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி, சிவகங்கை, வேலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் திமுகவில் நிர்வாக ரீதியாக புதிய ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டு புதிய ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் மற்ற மாவட்டங்களில் ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியாக உள்ளன. கட்சியில் கட்டமைப்பு ரீதியாக மாவட்டங்களை பிரிப்பது, மாவட்ட செயலாளர்கள் சிலரை மாற்றுவது குறித்தும் கட்சித் தலைமை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக, மண்டலம் வாரியாக பொறுப்பாளர்களை நியமிக்கவும் தி.மு.க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
