திமுக நிகழ்ச்சிக்காக கட்டப்பட்ட கயிறால் விபத்தில் சிக்கிய வழக்கறிஞர்
திமுக நிகழ்ச்சிக்காக கட்டப்பட்ட கயிறால் விபத்தில் சிக்கிய வழக்கறிஞர்
தேனியில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சிக்காக சாலையின் குறுக்கே கட்டப்பட்ட கயிறு கழுத்தில் அறுத்து மனைவியுடன் வந்த பைக்கில் வழக்கறிஞர் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனிசெட்டிபட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்காக சாலையில் வாகனங்கள் செல்லாதவாறு கயிறு கட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் அவ்வழியாக வழக்கறிஞர் ராமச்சந்திரன் தனது மனைவியுடன் டூவீலரில் வந்தபோது எதிர்பாராதாவிதமாக நைலான் கயிறு கழுத்தில் அறுத்ததில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் ராமச்சந்திரனுக்கு கழுத்துப் பகுதியில் பலத்த காயம் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
Next Story
