அக்யூஸ்ட்களாக மாறிய சட்ட கல்லூரி மாணவர்கள்..

x

சென்னையில் பணமோசடி செய்த நபரை கடத்திய மூன்று சட்டக் கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த ரபீக் என்பவரை மூன்று பேர் கடத்திச் சென்று 2 லட்சம் பணம் கேட்டு மிரட்டுவதாக அவரது தந்தை போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் பணம் தருவதாக கூறி எழும்பூர் வரவழைத்த போலீசார் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், தஞ்சாவூரை சேர்ந்த நபர் ஒருவரிடம் ரபீக் ஆன்லைன் பண மோசடி செய்ததால் ரபீக்கை கடத்தியதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட சட்ட கல்லூரி மாணவர்கள் அப்சர் அலி, வசந்த ராஜா, தினேஷ்குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள தஞ்சாவூரை சேர்ந்த நபரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்