லேசர் ஒளிக்கீற்று.. கடும் நடவடிக்கை.. சென்னை போலீசார் எச்சரிக்கை

x

சென்னை விமான நிலையம் அருகில் லேசர் ஒளிக் கற்றையை பயன்படுத்துவதால் விமானப் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் ஆபத்து ஏற்படுவதாக சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. லேசர் ஒளிக்கீற்றுகள் விமான ஓட்டிகளுக்கு கவனச்சிதறலை ஏற்படுத்தி, தற்காலிக பார்வைக் குறைபாட்டை உண்டாக்கும் என்று தெரிவித்துள்ள காவல்துறை, மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, விமான நிலையத்திற்கு அருகில் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என பொதுமக்களுக்கு காவல் துறை அறவுறுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்