இனி ரூ.10 ஆயிரம் வரை அரசு அதிரடி சலுகை.. தமிழகம் முழுக்க ஏப்.1 முதல் அமல்

x

பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு பதிவுக்கட்டணம், ஒரு சதவீதம் குறைப்பு தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 10 லட்சம் ரூபாய் வரையிலான மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துகள், பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால், அத்தகைய ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது, வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்