"உறவினரை வீட்டிற்குள் வைத்து, தீ வைத்து எரிப்பு" - 4 பேரை கைது செய்தது காவல்துறை

சொத்து தகராறில் உறவினரை வீட்டிற்குள் வைத்து, தீ வைத்து எரித்து கொலை செய்த 4 பேரை, போலீசார் கைது செய்தனர்.
"உறவினரை வீட்டிற்குள் வைத்து, தீ வைத்து எரிப்பு" - 4 பேரை கைது செய்தது காவல்துறை
Published on

கொடைக்கானல் அடுத்த பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா என்ற முனியாண்டியின் மூத்த மனைவி கருப்பாயிக்கு, மணி என்ற மகன் உள்ளார். இரண்டாவது மனைவி சிலம்பாயிக்கு, முத்துலட்சுமி என்ற மகள் உள்ளார். முத்துலட்சுமியை, எருக்கம்மாள்பட்டியை சேர்ந்த ஆண்டியப்பன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். கருப்பாயின் மகன் மணி, தனியாக வசித்து வந்த நிலையில், சொத்துக்களை, முத்துலட்சுமியும் அவரது கணவரும் அனுபவித்து வந்துள்ளனர். இந்த நிலையில், அந்த சொத்தை திருப்பிக்கேட்டு, மணி வலியுறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு ஆண்டியப்பன் மறுப்பு தெரிவித்த நிலையில், அவரை வீட்டிற்குள் வைத்து, மணி மற்றும் உறவினர்கள் எரித்துள்ளனர். இந்த வழக்கில், மணி, பால்ராஜ், ஜோசப் மற்றும் விஸ்வநாதன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com