Land Registration Latest Rules| தமிழகத்தில்மொத்தமாக மாறும் நிலத்தின் `கைடுலைன் வேல்யூ’

தமிழகத்தில்மொத்தமாக மாறும் நிலத்தின் `கைடுலைன் வேல்யூ’

தமிழகத்தில்மொத்தமாக மாறும் நிலத்தின் `கைடுலைன் வேல்யூ’ - உங்க லேண்டுக்கும் மாறலாம்.. மார்க்கெட் ரேட் கூடுமா? குறையுமா?

சந்தை வழிகாட்டி மதிப்பில் கண்டறியப்பட்டுள்ள முரண்பாடுகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருதாக பத்திரப்பதிவு துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.... சொத்துக்களின் சந்தை மதிப்பு வழிகாட்டிகளில் உள்ள முரண்பாடுகளைக் களைந்து சீரமைப்பதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. பத்திரப்பதிவு துறை வெளியிட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில், சந்தை மதிப்பு வழிகாட்டிகளில் கண்டறியப்பட்ட முரண்பாடுகள் தொடர்பாக உயர்மட்ட குழு அளித்த பரிந்துரைகள், வழிகாட்டு குழுவின் முன்பு ஜூலை 6ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இக்குழு அவற்றை விரிவாக பரிசீலனை செய்து, உயர்மட்ட குழுவின் பரிந்துரைகளை ஏற்று கொண்டு சந்தை மதிப்பு வழிகாட்டுதலில் கண்டறியப்பட்ட முரண்பாடுகளை சீரமைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநில அளவிலான மதிப்பீடுக் குழு கூட்டம் ஜூலை 15ம் தேதி நடைபெற்றது என்றும், இந்த உயர்மட்ட குழுவின் பரிந்துரைகள் குழு உறுப்பினர்களின் முன்பு சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், உரிய பரிசீலனைக்கு பின்பு கண்டறியப்பட்ட முரண்பாடுகளை சீரமைப்பதற்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சந்தை மதிப்பு வழிகாட்டிகளில் கண்டறியப்பட்ட முரண்பாடுகளை சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

#land #guideline #value #cmvijay #landregistration #latestrule #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com