Lake | Viral Video | வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

மணல் திருட்டுக்காக ஏரி உடைப்பதாக வைரலாகும் அதிர்ச்சி வீடியோ திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, மணல் திருடுவதற்காக ஏரியின் கரையை மர்ம கும்பல் உடைத்து தண்ணீரை வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெருவாயல் கிராமத்தில், ராட்சத மோட்டார்கள் மூலம் ஏரி நீர் வீணாக வெளியேற்றப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏரிக்குள் இருக்கும் மணலைத் திருடுவதற்காகவே திட்டமிட்டு நீர் வெளியேற்றப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, நீர்வளத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், தப்பியோடிய மர்ம கும்பலை கவரப்பேட்டை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com