Cuddalore | கதவை உடைத்து தூங்கிக் கொண்டிருந்தவரை கட்டையால் அடித்தே கொன்ற நபர் - கடலூரில் கொடூரம்
கடலூரில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கூலித்தொழிலாளி, கட்டையால் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சக்குப்பம் பெண்ணை நகர் பகுதியில் பிளம்பர் தொழில் செய்து வந்த பால்ராஜ் என்பவர், அதிகாலையில் மதுபோதையில் தனது வீட்டிற்கு அருகிலுள்ள புஷ்பராஜ் என்பவரது வீட்டில் நுழைந்துள்ளார். இதுகுறித்து, தனது தம்பி சண்முகராஜிடம் புஷ்பராஜ் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சண்முகராஜ், பால்ராஜ் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று அவரை கட்டையால் தாக்கிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக
சண்முகராஜை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
