"சட்டப்பேரவையில் பா.ஜ.க. உறுப்பினர்கள் இடம் பெறுவது தான் இலக்கு" - எல்.முருகன், பா.ஜ.க. மாநிலத் தலைவர்

பா.ஜ.க மாநில தலைவராக நியமிக்கப்பட்ட எல்.முருகன் சென்னையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில், மூத்த தலைவர்கள் முன்னிலையில் முறைப்படி பதவி ஏற்றார்.

பா.ஜ.க மாநில தலைவராக நியமிக்கப்பட்ட எல்.முருகன் சென்னையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில், மூத்த தலைவர்கள் முன்னிலையில் முறைப்படி பதவி ஏற்றார். முன்னதாக கட்சி அலுவலகம் வந்த அவருக்கு உற்சாக தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில தலைவராக நியமனம் செய்த கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி மற்றும் அனைத்து பா.ஜ.க தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், தமிழக மக்கள் நலன் சார்ந்த விசயத்தில் சமரசம் செய்ய மாட்டோம் என தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com