குவைத் தீயில் தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதித்த நபர் - வீட்டிற்கு வந்தவரை திரும்ப அழைத்த விதி

குவைத் தீயில் தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதித்த நபர் - வீட்டிற்கு வந்தவரை திரும்ப அழைத்த விதி
Published on

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முட்டம் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை குவைத் தீ விபத்தில் உயிரிழந்துள்ளார்...

இவருக்கு சத்யா என்பவருடன் திருமணமாகி 5 வருடங்கள் ஆகும் நிலையில் தற்போது வரை குழந்தைகள் இல்லை... கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னதுரை குவைத்தில் பணியாற்றி வந்த நிலையில், குடும்பத்தினருடன் இருப்பதற்காக வேலைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கே முன்பு தான் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்... மீண்டும் குவைத் நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்ததால் அவர் அங்கு சென்ற நிலையில், 2 வாரங்களில் அவர் சொந்த ஊர் வருவதாக இருந்தது... இந்த சூழலில் சின்னதுரை தீ விபத்தில் மரணம் அடைந்ததாக வந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... சின்னதுரை உடலை சொந்த ஊருக்கு உடனடியாக கொண்டு வர வேண்டும் என அவர்கள் கண்ணீர் மல்க அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்...

X

Thanthi TV
www.thanthitv.com