கெட்டவார்த்தையில் பசங்க கூட சேர்த்து வச்சி ரொம்ப அசிங்கமா பேசுனாங்க'' - பேசமுடியாமல் கண்ணீர்விட்ட பெண்கள்
நர்சிங் வேலை வாங்கித் தருவதாக கூறி குவைத்திற்கு அழைத்துச் சென்று அடித்து கொடுமைப்படுத்தியதாக டிஜிபி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் கண்ணீர் மல்க புகாரளித்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 இளம்பெண்களும் குமரியை சேர்ந்த ஏஜென்ட் பெலியா என்பவரிடம் இரண்டரை லட்சம் பணம் கொடுத்து கடந்த ஆண்டு மே மாதம் குவைத்திற்கு வேலைக்குச் சென்ற நிலையில் அங்கு நர்சிங் வேலைக்கு பதில், தங்களை வீட்டு வேலையில் அமர்த்தி தொடர்ச்சியாக அடித்து ஊதியம் தராமல் கொடுமைப் படுத்தியதாக அவர்கள் புகாரில் தெரிவித்துள்ளனர். இதே போல 12 பெண்கள் அங்கு சிக்கி தவித்து வருவதாகவும், அவர்களை மீட்டு தங்களது பணத்தை ஏஜெண்டிடம் இருந்து பெற்று தர வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story
