

குற்றாலத்தில் சீசன் முடிந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை குறையாமலே உள்ளது. குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் இருக்கும். இந்த ஆண்டு சீசன் சற்று தாமதமாகவே தொடங்கியது. இந்நிலையில் வழக்கமாக இருக்கும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களை கடந்து செப்டம்பர் வரையிலும் அருவிகளில் தண்ணீர் விழுந்து வருகிறது. சீசன் முடிந்த சூழ்நிலையிலும் சுற்றுலாப்பயணிகள் தினமும் குற்றாலம் வந்து, ரம்மியான காட்சிகளை ரசித்து செல்கின்றனர்.