நண்பன் மனைவியிடம் பழகியதால் பறிபோன உயிர்.. துடிதுடிக்க முடித்த சக நண்பர்கள்..
சென்னை பெருங்குடியில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இரு தினங்களுக்கு முன்பு மது போதையில், நண்பர்கள் தாக்கியதில் ஜீவரத்தினம் காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, அப்பு, ஜகதீஷ் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது,
ஐபிஎல் போட்டியில் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி தோற்றதை கிண்டல் செய்ததால் அவரை தாக்கியதாக தெரிவித்தனர். போலீசார் தீவிரமாக விசாரித்தபோது, அப்புவின் மனைவியிடம் ஜீவரத்தினம் பழகி வந்ததை தட்டிக்கேட்டபோது தகராறு ஏற்பட்டதாக தெரிவித்தனர். ஜீவரத்தினம் உயிரிழந்ததை அடுத்து, கொலை வழக்காக மாற்றி 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Next Story
