23 நபர்கள் பலியான குரங்கணி வனப்பகுதி - 8 மாதங்களுக்கு பிறகு மலை ஏற்றப் பயிற்சிக்கு அனுமதி

23 நபர்கள் பலியான குரங்கணி வனப்பகுதியில், 8 மாதங்களுக்குப் பிறகு இன்று, முதல் மலை ஏற்றப்பயிற்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
23 நபர்கள் பலியான குரங்கணி வனப்பகுதி - 8 மாதங்களுக்கு பிறகு மலை ஏற்றப் பயிற்சிக்கு அனுமதி
Published on

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்தில் 23 பேர் பலியான சம்பவத்தை அடுத்து, குரங்கணி மலை ஏற்றத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது. இந்நிலையில் 8 மாதங்களுக்கு பிறகு இன்று குரங்கணி வனப்பகுதியில் முதல் மலை ஏற்றத்திற்கு வனத்துறை அனுமதி அளித்தது. இது குறித்து கூறிய மாவட்ட வன அலுவலர் கவுதம், குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே மலை ஏற்றத்திற்கு அனுமதி எனவும், வன அலுவலர் அனுமதி பெற்றே மலை ஏற வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பினி பெண்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து வனப்பகுதியில் கண்காணிப்பு கேமரா வைக்கவும், வனத்துறை சார்பாக இணையதள சேவை துவங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com