அலறவிடும் காட்டு யானையை மிரளவிட இறங்கிய கும்கி

x

பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி பூண்டி ஆண்டவர் கோவில் வளாகத்தில், ஒற்றை காட்டு யானையை கட்டுப்படுத்த, டாப் சில்ப்பில் இருந்து கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.

கோவை வெள்ளியங்கிரி ஏழாவது மலையில் உள்ள சுயம்புவாக தோன்றிய லிங்கம், சிவன் கோவிலுக்கு செல்வதற்கு வனத்துறையினர் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மே நான்கு மாதங்கள் பக்தர்களுக்கு அனுமதி அளிப்பார்கள். இந்தாண்டும் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பக்தர்களுக்கு மலையேற வனத் துறையினர் அனுமதி அளித்து உள்ளனர். இதற்காக கடந்த பிப்ரவரி முதல் தமிழக மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக் கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வெள்ளியங்கிரி அடிவாரப் பகுதியில் உள்ள பூண்டி ஆண்டவர் கோயில் சன்னிதி வளாகத்தில், மலையேறும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் உலா வரும் காட்டு யானை அங்குள்ள கடைகள் மற்றும் அன்னதான கூடங்களுக்கு சென்று அங்கு வைத்து இருக்கும் உணவுப் பொருட்களை தின்று சேதப்படுத்திச் செல்வது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் கோவில் வளாகத்திற்குள் புகுந்த அந்த யானை, அங்கும், இங்குமாக கடைகள் வழியாக நடந்து சென்றது. அப்போது அங்கு இருந்த காவல் துறையினர் வைத்து இருந்த இரும்பு தடுப்பு தள்ளிவிட்டு கடைகளில் வைக்கப்பட்டு இருந்த பொருட்களை தூக்கி வீசியும், மிதித்தும் சேதப்படுத்தியது.

நாளைக்கு நாள் காட்டு யானையின் வருகை அதிகரித்து காணப்பட்டதால் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து கோயில் சுற்றி பெரிய அகழி எடுத்து வராமல் தடுப்பு ஏற்படுத்தினர் இருந்தபோதிலும் ஏதாவது ஒரு பகுதிக்குள் புகுந்து மீண்டும் காட்டு யானை கோவில் வளாகத்துக்கு வந்தது இதனால் பக்தர்கள் மற்றும் அங்குள்ள கடை வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதேபோல வருகின்ற 12ஆம் தேதி சித்ரா பௌர்ணமி வருவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்நேரத்தில் யானையால் எந்த அசம்பாவிதம் ஏற்படாமல் இருப்பதை தடுக்க நேற்று கும்கி நரசிம்மனை கொண்டுவரப்பட்டு தற்போது யானை வரும் திசையில் நிக்க வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எந்த நேரத்திலும் காட்டு யானை கோவில் வளாகத்துக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதே போல காட்டு யானை வந்தால் அதை கோவில் வளாகத்துக்குள் வராமல் தடுக்க கும்கி கம்பீரமாக நிற்பதால் பெரும் பரபரப்பான சூழ்நிலையை அப்பகுதி நிலவி வருகிறது


Next Story

மேலும் செய்திகள்