கும்பகோணம் : அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் - கோட்டாட்சியரிடம் மாணவிகள் மனு

கும்பகோணத்தில் ஒரு தனியார் பள்ளி, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிக கட்டணம் வசூல் செய்வதாக, பாதிக்கப்பட்ட மாணவிகளே கோட்டாட்சியரிடம் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கும்பகோணம் : அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் - கோட்டாட்சியரிடம் மாணவிகள் மனு
Published on
கும்பகோணத்தில் ஒரு தனியார் பள்ளி, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிக கட்டணம் வசூல் செய்வதாக, பாதிக்கப்பட்ட மாணவிகளே கோட்டாட்சியரிடம் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பள்ளியில் பயிலும் மாணவிகள் இருவர், கடந்த ஆண்டு தலா 15 ஆயிரம் வீதம் 30 ஆயிரம் ரூபாய் செலுத்திய நிலையில், இந்த ஆண்டும் பள்ளிக் கட்டணம் கேட்பதாகவும், கட்டணம் செலுத்திய பிறகு புத்தகங்கள் தர மறுப்பதாகவும் கூறியுள்ளனர். ஏழை மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்த சிரமப்படுவதாக கூறியுள்ள அவர்கள், இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், கோட்டாட்சியரிடம் மனு அளித்ததாக தெரிவித்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com