9 உலோக சிலைகள் திருட்டு வழக்கு - மேலும் 3 பேர் கைது

வேதாரண்யம் அருகே 9 உலோக சிலைகள் திருடப்பட்டது தொடர்பான வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
9 உலோக சிலைகள் திருட்டு வழக்கு - மேலும் 3 பேர் கைது
Published on

வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலத்தில் பல்வேறு கோவில்களில் திருடப்பட்ட 9 உலோக சிலைகள் கடந்த மாதம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5க்கும் மேற்பட்ட கோவில்களில் குருக்களாக பணிபுரிந்து வந்த பைரவ சுந்தரம் மற்றும் அவருக்கு உதவிய செல்வம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அவர்களுடன் தொடர்புடைய நைனா முகமது, பிரபாகரன், சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் 3 பேரையும் கும்பகோணத்தில் உள்ள நீதிபதிகள் வீட்டில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com