

கும்பகோணம் அருகே ஆற்றுப்பாலம் கட்டும்போது கிடைத்த பழங்கால அம்மன் சிலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கும்பகோணம் நாச்சியார்கோவில் அருகே கிருஷ்ணாபுரம், செம்பியவரம்பல் இணைப்பு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக பள்ளம் தோண்டும் போது, பழங்கால அம்மன் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சிலையை கைப்பற்றி நாச்சியார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.