Kumbabishekam | ரெண காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் - திரண்டு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

Kumbabishekam | ரெண காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் - திரண்டு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ரெண காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக மங்கள இசையுடன் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ததுடன் பக்தர்களுக்கு அன்னதானமும் பிரசாதமும் வழங்கப்பட்டன.

X

Thanthi TV
www.thanthitv.com