ஒரே நேரத்தில் 50 பேர் மேல் இறங்கிய கருப்பன் - ஆக்ரோஷத்தை பார்த்து அரண்டுபோன பக்தர்கள்
கும்பாபிஷேகத்தில் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமியாடியதால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. குன்னம் அருகே அகரம்சீகூர் கிராமத்தில், ஸ்ரீ சூலைகருப்புசாமி கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர், ஒரே நேரத்தில் அருள் வந்து ஆடியதால் அந்த இடம் பரபரப்பாகமாறியது. அருள் வந்து ஆடிய பக்தர்கள்மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
Next Story
