ஜல்லிக்கட்டு போட்டியில் 39 பேர் காயம் - மாடுபிடி வீரர் பலி

x

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், காளை முட்டியதில் படுகாயமடைந்த மாடுபிடி வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில், 600 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், சிறந்த காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதனிடையே, போட்டியில் 39 பேர் காயமடைந்த நிலையில், படுகாயமடைந்த தலைவாசல் பகுதியைச் சேர்ந்த வீரர் தாமஸ் ஆல்வா எடிசன், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்