சிறுமி கழுத்தறுப்பு சம்பவம் - தந்தை சொன்ன பகீர் தகவல்
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே 15 வயது சிறுமி, கழுத்தறுக்கப்பட்ட சம்பவத்தில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சிறுமியின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். அண்ணாவி பூசாரிபட்டியை சேர்ந்த சிறுமி, இரவில் வெளியே சென்று திரும்பி வந்தபோது, கழுத்தில் காயங்களுடன் மீட்கப்பட்டார். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமியை அவருடைய பெரியப்பா மகன் கத்தியால் கழுத்தை அறுத்ததாக கூறப்படும் நிலையில், அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அவருடைய தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
Next Story
