கிண்டல் செய்த சிறுமியை கழுத்தறுத்து கொன்ற சிறுவன்.. தடயத்தை அழிக்க செய்த கொடூர செயல்

x

கிண்டல் செய்த சிறுமியை கழுத்தறுத்து கொன்ற சிறுவன்.. தடயத்தை அழிக்க செய்த கொடூர செயல்

குளித்தலை அருகே தங்கை முறையில் உள்ள 15 வயது சிறுமியை கத்தியால் கழுத்தை அறுத்த சம்பவத்தில் சிறுவனை சிறார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கடவூர் பகுதியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை நடைபெற்றது. சிறுமி தன்னை தொடர்ந்து கிண்டல் செய்து வந்ததாகவும், சக மாணவர்களிடம் இழிவாக பேசிய காரணத்தினாலும் சிறுமியின் கழுத்தை அறுத்ததாக, போலீஸ் விசாரணையின் போது சிறுவன் தெரிவித்துள்ளார். மேலும் குற்றத்தை மறைக்கும் நோக்கத்தில், அருகில் உள்ள கிணற்றில் கத்தி மற்றும் தனது ஆடைகளை வீசிச் சென்றதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில், சிறுவனை மார்ச் 10ம் தேதி வரை திருச்சி சிறார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்