"உரிய பதவியிடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கவில்லை " - தி.மு.க. தலைமை மீது கே.எஸ் அழகிரி குற்றச்சாட்டு
ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு , 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் ஒன்று கூட வழங்கப்படவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி புகார் தெரிவித்துள்ளார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு , 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் ஒன்று கூட வழங்கப்படவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி புகார் தெரிவித்துள்ளார். 303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளில் காங்கிரஸ் கட்சிக்கு இதுவரை 2 இடங்கள் மட்டும் திமுக தலைமையால் வழங்கப்பட்டுள்ளதாக கே.எஸ். அழகிரி குறிப்பிட்டுள்ளார். இது கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது என்று வருத்தத்துடன் தெரிவித்து கொள்வதாக கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
